ஆயுட் காப்புறுதி

ஆயுட் காப்புறுதி

ஆயுள் காப்புறுதி தொடர்பான தீர்வுகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க DFCC வங்கியானது AIA Insurance Sri Lanka (AIA) நிறுவனத்துடன் பிரத்தியேகமான கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு காலம்

ஓய்வு காலம்

AIA ஈஸி பென்ஷன்

இலகுவான படிமுறைகளுடன் ஓய்வு காலத்திற்கான ஒரு விரிவான திட்டம்.

AIA ஈஸி பென்ஷன் உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • முதிர்வு தொகையை மொத்தத் தொகையாகப் பெறுவதற்கான தெரிவு அல்லது 5 – 30 ஆண்டுகளுக்கு ஒரு மாதாந்த ஓய்வூதியத்தைத் தெரிவு செய்ய முடியும்
  • உங்கள் ஓய்வூதிய நிதிக்கு காப்புறுதித் திட்டத்தின் 10, 15 மற்றும் 20 ஆவது ஆண்டுகளில் (நீங்கள் தெரிவுசெய்த கட்டுப்பண முறையைப் பொறுத்து) நம்பிக்கைக்கான வெகுமதியுடன் ஒரு கவர்ச்சியான ஊக்குவிப்பு அனுகூலம்
  • நீங்கள் மரணித்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்புறுதி கொடுப்பனவு
  • விபத்து காரணமாக நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையாக / பகுதியளவில் ஊனமுற்றால் உங்கள் குடும்பத்திற்கு விபத்து கொடுப்பனவு
  • கட்டுப்பண பாதுகாப்பு நன்மை – நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையாக மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றால், உங்கள் சார்பாக கட்டுப்பணத்தை செலுத்துவதன் மூலம் AIA உங்கள் காப்புறுதித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்
  • அவசரகாலத்தில் உங்கள் நிதியில் 15% வரை திரும்பப் பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மை
  • உங்கள் வசதிக்கு ஏற்ப 4 ஓய்வூதிய திட்டங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் திறன்
  • ஒவ்வொரு ஆண்டும் வருடாந்த பங்குலாபத்தொகை வீதத்தை விட 30% அதிகமாக செலுத்துவதன் மூலம் பங்குலாபத் தொகையுடன் வளப்படுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம்
  • நீங்கள் 3 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒரு நாளைக்கு ரூபா 4,000 வரை தினசரி பணக் கொடுப்பனவு, இதனால் உங்கள் அன்றாட செலவுகளை நீங்கள் சமாளிக்க முடியும்
  • புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட 22 பாரதூரமான நோய்களுக்கு எதிராக நிதியியல் ரீதியாக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாரதூரமான நோய்களுக்கான கொடுப்பனவு நன்மை
  • வழங்கப்படுகின்ற வயது 19-61 [அடுத்த பிறந்த தினத்தின் போது]. அதிகபட்ச முதிர்வு வயது 76

 

AIA ஸ்மாட் பென்ஷன்

ஓய்வுகாலத்தின் போது விலைவாசி உயர்வை சமாளிப்பதற்காக அதிகரித்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓய்வூதியத் திட்டம்.

AIA ஸ்மாட் பென்ஷன் உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • தொழில்ரீதியாக நிர்வகிக்கப்படும் ஓய்வூதிய நிதி உங்கள் வருடாந்த கட்டுப்பணத்தின் 1750% வரை பாரிய நம்பிக்கை வெகுமதியால் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது
  • முதிர்வு தொகையை மொத்தத் தொகையாகப் பெறுவதற்கான தெரிவு அல்லது 10 – 30 ஆண்டுகளுக்கு ஒரு மாதாந்த வருமானத்தைத் தெரிவு செய்ய முடியும்
  • ஒவ்வொரு ஆண்டும் வருடாந்த பங்குலாபத்தொகை வீதத்தை விட 30% அதிகமாக செலுத்துவதன் மூலம் பங்குலாபத் தொகையுடன் வளப்படுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம்
  • கட்டுப்பண பாதுகாப்பு நன்மை – நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையாக மற்றும் நிரந்தரமாக ஊனமுற்றால், உங்கள் சார்பாக கட்டுப்பணத்தை செலுத்துவதன் மூலம் AIA உங்கள் காப்புறுதித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்
  • துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதிய திகதி வரை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு மொத்த தொகை அல்லது மாத வருமானமாக கிடைக்கும் தெரிவுடன் ஆயுள் காப்புறுதி நன்மை
  • ஓய்வூதியம் பெறும் காலத்தில் நீங்கள் மரணித்தால் மரணச்சடங்கு செலவு நன்மை அதிகபட்சமாக ரூபா. 500,000
  • அவசரகாலத்தில் உங்கள் நிதியில் 15% வரை திரும்பப் பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மை
  • உங்கள் குடும்பத்தின் மருத்துவ செலவுகளுக்காக குடும்ப மருத்துவ செலவு காப்புறுத் திட்டம், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் செலவுகளுக்காக உங்களுக்கு ஈடுகட்டப்படுகிறது
  • வழங்கப்படுகின்ற வயது 19-61 [அடுத்த பிறந்த தினத்தின் போது]. அதிகபட்ச முதிர்வு வயது 76

காப்பீடு

AIA சுப்பர் புரொடெக்டர்

உங்களுக்கான காப்பீட்டுத் தேவைகளுக்கு கட்டுபடியாக கட்டுப்பணங்களுடன் பிரத்தியேகமயமாக்கப்பட்ட ஒரு தீர்வு.

AIA சுப்பர் புரொடெக்டர் உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • ஆயுள் காப்பீட்டு நன்மைத் தொகையை ரூபா. 1 மில்லியன் மற்றும் ரூபா. 500 மில்லியன் தொகைக்கு இடையில் தெரிவு செய்து கொள்ள முடியும்.
  • ஒவ்வொரு காப்பீட்டுத் திட்டத்தின் நிறைவு வரை ஒவ்வொரு ஆண்டின் நிறைவின் போதும் (எளிய நேர்-வழிமுறை அடிப்படையில்) அல்லது அல்லது மரண இழப்பீடு கோரப்படும் வரை உங்கள் வாழ்க்கை ஆயுள் காப்புறுதி நன்மை 5% ஆல் அதிகரிக்கும்
  • நீங்கள் இல்லாத காலத்திலும் கூட உங்கள் அன்புக்குரியவர்களுக்கு குடும்ப வருமானம் அதிகரிக்கும்
  • மரண இழப்பீட்டை நீங்கள் கோராத பட்சத்தில், செலுத்தப்பட்ட முழு கட்டுப்பணத்தொகையையும் பெற்றுக்கொள்ளும் திறன்
  • உங்கள் காப்பீட்டுத் தீர்வை பிரத்தியேகமாக்கிக் கொள்வதற்கு நீங்கள் தெரிவு செய்ய 6 விதமான நன்மைகள் (விபத்து இறப்பு நன்மை, நிரந்தர ஊனமுறல் நன்மை (தற்காலிக முழுமையான ஊனமுறல் / நிரந்தர முழுமையான ஊனமுறல்), குடும்ப வருமான நன்மை, பாரதூரமான நோய் நன்மை, செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை திருப்பிப் பெறும் நன்மை மற்றும் கட்டுப்பண காப்பீட்டு நன்மை)
  • வழங்கப்படுகின்ற வயது 19-66. அதிகபட்ச முதிர்வு வயது 75.

சேமிப்பு

AIA கல்வித் திட்டம்

உங்கள் பிள்ளையின் கல்வித் திட்டங்களைப் பாதுகாக்க விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் காப்புறுதித் திட்டம்.

AIA கல்வித் திட்டம் உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • ஒவ்வொரு ஆண்டும் பங்குலாபத்தொகையை ஈட்டும் ஒரு நிதி என்பதால் உங்கள் பிள்ளையின் கல்விக்கான நிதி காலப்போக்கில் தொடர்ந்து வளர்கிறது
  • நீங்கள் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் நீங்கள் இல்லாவிட்டாலும் அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலும் உங்கள் பிள்ளைக்கான கல்வி நிதி
  • நீங்கள் மரணித்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீட்டு நன்மை
  • காப்பீட்டுத் திட்டம் 10 ஆவது எட்டும் போது உங்கள் வருடாந்த அடிப்படை கட்டுப்பணத்தொகையின் 400% வரை நம்பிக்கை வெகுமதி
  • உங்கள் கொடுப்பனவு நிகழ்வெண்ணை தீர்மானிக்கும் சுதந்திரம் – மாதாந்தம், காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும்
  • விபத்து காரணமாக நீங்கள் இறந்தால் அல்லது முழுமையான / பகுதியளவு ஊனமுற்றால் உங்கள் குடும்பத்திற்கு ஒரு விபத்து காப்பீட்டு நன்மை
  • வழங்கப்படுகின்ற வயது 19-61 [அடுத்த பிறந்த தினத்தின் போது]. அதிகபட்ச முதிர்வு வயது 75

சுகாதாரம்

AIA ஹெல்த் புரொடெக்டர்

உலகில் எங்கும் சிறந்த சுகாதார சேவைக்கு இடமளிக்கும் ஒரு விரிவான சுகாதார காப்பீடு.

AIA ஹெல்த் புரொடெக்டர் உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளுக்கு ரூபா. 50 மில்லியன் வரையான உலகளாவிய காப்பீடு
  • இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள 60 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணமல்லாது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வசதி
  • புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட 37 நோய்களுக்கான காப்பீடு
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க ஒரு நாளைக்கு ரூபா 20,000 வீதம் தினசரி பண வருவாய்
  • முதிர்வின் போது பாரிய தொகை கொண்டு ஒரு சுகாதார நிதி, எனவே 70 வயதுக்குப் பிறகும் தரமான சுகாதார சேவையை நீங்கள் தொடர்ந்து பெற முடியும்
  • எந்தவொரு அவசர காலத்திலும் உங்கள் சுகாதார நிதியில் 15% வரை மீளப் பெற முடியும்
  • கொடுப்பனவுத் தெரிவுடன், மருத்துவமனையில் சேர்க்கும் போது ஆரம்பத்தில் ஏற்படும் செலவுகளை நீங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருடாந்த கட்டுப்பணத் தொகையில் 76% வரை தள்ளுபடியை அனுபவிக்கும் தெரிவையும் நீங்கள் கொண்டுள்ளீர்கள்
  • 250 சத்திர சிகிச்சைகள் மற்றும் 136 ஒரு நாள் சத்திர சிகிச்சைகளுக்கு உலகளாவிய காப்பீடு
  • ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஆரோக்கியம், பல், மகப்பேறு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்ற உள்ளிணைக்கப்பட்ட நன்மைகள்
  • வழங்கப்படுகின்ற வயது 19-61 அதிகபட்ச முதிர்வு வயது 70

* அமெரிக்கா மற்றும் கனடா நீங்கலாக
 

AIA சுவ திரிய

பாரதூரமான நோயால் ஏற்படும் எந்தவொரு நிதி நெருக்கடியையும் தணிக்கும் ஒரு திட்டம்.

AIA சுவ திரிய உங்களுக்கு வழங்கும் வரப்பிரசாதங்கள்

  • 4 முக்கிய பொதுவான நோய்களுக்கு (இருதயம், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் பக்கவாதம்) காப்பீட்டை வழங்கும் ஆயுள் காப்புறுதித் திட்டம்
  • இருதயம் தொடர்பான பாரதூரமற்ற நோய்கள் / சத்திர சிகிச்சைகள் மற்றும் ஆரம்ப கட்ட புற்றுநோய்களுக்கான ஒரு குறிப்பிட்ட வகைக்கு உங்களுக்கு காப்பீடு கிடைக்கின்றது
  • பாரதூரமற்ற இருதய நோய் அல்லது ஆரம்ப கட்ட புற்றுநோய் காரணமாக இழப்பீடு கோரப்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டுப்பணம் தள்ளுபடி செய்யப்படுதல்
  • நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து பாரதூரமான இருதய நோய்இ பாரதூரமான புற்றுநோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமாக இழப்பீடு கோரப்பட்டால் திட்டத்தில் எஞ்சிய காலத்திற்கான கட்டுப்பணம் தள்ளுபடி செய்யப்படுதல்
  • ‘நோயிலிருந்து குணமாகும் நன்மை’, இது ஒரு பாரதூரமான நோயிலிருந்து குணமாகின்ற காலகட்டத்தில் மாத வருமானத்தை வழங்குகிறது (பாரதூரமான இருதய நோய், பாரதூரமான புற்றுநோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமாக இழப்பீடு கோரப்பட்டால்)
  • துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு மரணம் ஏற்பட்டால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவ ஒரு ஆயுள் காப்பீட்டு நன்மை
  • திட்டத்தின் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் உங்கள் பாரதூரமான நோய் காப்பீட்டு நன்மை மற்றும் ஆயுள் காப்பீட்டு நன்மையை அதிகரிக்கும் ‘இழப்பீடு கோரப்படாமைக்கான வரப்பிரசாதம்’
  • ‘செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை மீளப்பெறும்’ தெரிவு – காப்பீட்டுத் திட்டத்தின் காலப்பகுதியில் நீங்கள் எந்த இழப்பீட்டையும் முன்வைக்கவில்லை என்றால், காப்பீட்டுத் திட்ட காலத்தின் போது செலுத்தப்பட்ட மொத்த கட்டுப்பணத்தையும் நீங்கள் பெறுவீர்கள்
  • வழங்கப்படுகின்ற வயது 19-60 அதிகபட்ச முதிர்வு வயது 70


Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 20

Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 21


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84