DFCC கை கொடுக்கும் கரம்

DFCC கை கொடுக்கும் கரம்

நிலையான வருமானம் ஈட்டுபவர்களுக்கான கடன் திட்டம் (வெளிநாட்டு ஊழியர் பிரிவுக்கு)

அறிமுகம்

அறிமுகம்

தென் கொரியா, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு ஒன்றிய நாடுகள் போன்றவற்றில் வெளிநாட்டு வேலை தேடும் தொழில் திறன் கொண்ட ஊழியர்களுக்கு அவர்கள் நாட்டை விட்டுப் புறப்பட முன்னர் ஏற்படுகின்ற செலவுகள் மற்றும் வணிக மேம்பாட்டு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விசேட கடன் திட்டம்.

தகைமை பெறும் துறைகள்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் மற்றும் தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைப் பேணுகின்ற இலங்கைப் பிரஜைகள்.

நோக்கம்

  • பின்வருவனவற்றைப் போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக ஏற்படுகின்ற செலவுகள்
    • முகவர் கட்டணம்
    • விமானக் கட்டணச் செலவு
    • பொருந்தக்கூடிய இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக கட்டணம்
    • பிற தொடர்புடைய செலவுகள்
  • வணிக மேம்பாட்டு நோக்கம் – ஏற்கனவே உள்ள மற்றும் தொடக்க வணிக முயற்சிகளுக்கு

கடன்தொகை

  • அதிகபட்சம் ரூபா 3,000,000/- வரை

திருப்பிச் செலுத்தும் காலம்

  • 3 மாத சலுகைக் காலம் உட்பட அதிகபட்சம் 36 மாதங்கள்

பிணை

  • இரண்டு ஏற்றுக்கொள்ளக்கூடிய தனிப்பட்ட உத்தரவாதகாரர்களுடன் ரூபா 500,000 வரையிலான கடன்கள்
  • அசையா சொத்து அடமானத்துடன் ரூபா 500,001 முதல் ரூபா 3,000,000 வரையிலான கடன்கள்

தேவையான ஆவணங்கள்

  • ஆள் அடையாள ஆவணங்கள்
  • இலங்கைக்கு வெளியே முகவரியை நிரூபிக்கும் ஆவணங்கள்
  • செல்லுபடியாகும் தொழில் விசா
  • கடன்படுநரின் தொழில் ஒப்பந்தம் அல்லது நியமனக் கடிதம்
  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் வழங்கப்படுகின்ற, DFCC வங்கிக்கு முகவரியிடப்பட்ட வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தல் கடிதம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

01. இந்தக் கடன் வசதியைப் பெற நான் தகுதியுடையவரா?

    • நீங்கள் இலங்கைப் பிரஜையாக இருந்து, செல்லுபடியாகும் தொழில் விசாவை வைத்திருந்தால், நீங்கள் கடன் வசதியைப் பெறத் தகுதியுடையவர்
02. கடனுக்காக நான் எவ்வாறு விண்ணப்பிப்பது?

    • நீங்கள் விரும்பும் ஒரு கிளைக்குச் சென்று உங்கள் தேவைகளைப் பற்றி அலுவலர்களுடன் கலந்துரையாடலாம். விண்ணப்பிக்கும் செயல்முறையின் மூலம் அவர்கள் உங்களுக்கு இது தொடர்பில் அறிவூட்டுவார்கள்
03. கடன் வாங்குபவர்களுக்கு வயது எல்லை ஏதேனும் உள்ளதா?

    • ஆம். விண்ணப்பிக்கும் போது நீங்கள் 24-60 வயது கொண்டவராக இருக்க வேண்டும்
04. கூட்டாக விண்ணப்பிக்க முடியுமா?

    • ஆம். இலங்கையில் வசிக்கும் அத்தகைய நபருக்கு அடமானம் வைக்கப்பட்ட சொத்து சொந்த உடமையாக இருக்கும் பட்சத்தில் இலங்கையில் வசிக்கும் நபரான அத்தகைய உடனடி குடும்ப உறுப்பினருடன் கூட்டாக கடன் வழங்கப்படலாம்
05. இந்த கடன் திட்டம் மீளப்பெறப்படக்கூடிய செலவினங்களுக்கும் பொருந்துமா?

    • ஆம், உங்கள் புலம்பெயர்வதற்கான செலவினங்களை நீங்கள் மீளப்பெறுவதற்கு இக்கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
06. கடனைச் செயல்படுத்த எவ்வளவு காலம் ஆகும்?

    • கடன்படுநர் தேவையான அனைத்து ஆவணங்களையும் தகவல் விபரங்களையும் உரிய முறையில் சமர்ப்பித்தால், கடன் 2 வாரங்களுக்குள் செயல்படுத்தப்படும்.
07. நான் எவ்வாறு திருப்பிச் செலுத்துவது?

    • கடன்படுனரின் பெயரில் அவரது தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற வெளிநாட்டு நாணயம் மற்றும் கடன்படுநரின் தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்கிலிருந்து மாற்றப்படுகின்ற நிதிகள் மூலம் இக்கடன் திருப்பிச் செலுத்தப்படல் வேண்டும்.
08. கடனாளிகள் தங்கள் கடனை முன்கூட்டியே அடைக்க முடியுமா? அப்படியானால், வாடிக்கையாளருக்கு ஏதேனும் நன்மை உண்டா?

    • ஆம், ஆனால் இந்த நிகழ்வில், கடன்படுநர்கள் கட்டணமொன்றை செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் மீள அடைக்கப்பட்டுள்ள காலத்தைப் பொறுத்து மாறுபடும். கடனுக்கான எதிர்கால வட்டியைச் சேமிப்பதைத் தவிர, குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை.
09. மேலும் விவரங்களைப் பெற நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

    • மேலும் விபரங்களுக்கு எங்கள் 24 மணிநேர அழைப்பு மையத்தை 0112 3500000 என்ற இலக்கத்தின் மூலமாகத் தொடர்பு கொள்ளவும்

எங்களுடன் தொடர்பு கொள்வதற்கு

24 * 7 தொலைபேசி சேவை – 0112 350000


    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 79

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 80

    Warning: Trying to access array offset on value of type null in /var/www/html/dfcc.lk/wp-content/themes/dfccbank/template-parts/post/inquire-form-ta.php on line 84